TamilsGuide

தான்சானியாவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது- 40 பேர் பலி

தான்சானியா நாட்டில் கிளிமஞ்சாரோ மோனி டங்கா சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று 2 பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் 2 பஸ்களும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் வெளியில் வர முடியாமல் உயிர் பயத்தில் அலறினார்கள். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயைஅணைத்தனர். ஆனாலும் 2 பஸ்களில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றவர்கள் பஸ்சின் டயர் பஞ்சரானதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

Leave a comment

Comment