TamilsGuide

அடுத்த கட்டத்திற்கு சென்ற பூரி ஜெகநாத் - விஜய் சேதுபதியின் படம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.

இவர் இயக்கிய இட்லு ச்ரவனி சுப்ரமணியம்,அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு,சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் சிறு பூஜை விழா இன்று நடைப்பெற்றது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment