TamilsGuide

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எஃப்.யு. வுட்லர் நியமனம்

பொலிஸ் ஊடகப் பிரிவின் தற்போதைய உதவிப் பணிப்பாளரான, உதவிப் பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வுட்லர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்கவுக்குப் பதிலாக இவரது நியமனம் வந்துள்ளது.

இதேவேளை, பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக புத்திக மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலின் பேரில் இந்த வழங்கப்பட்டுள்ள இந்த நியமனங்கள் உடனடியாக அமுலக்கு வந்துள்ளன.

இங்கிலாந்திலுள்ள பகின்க்ஹெம்சயர் (‍Buckinghamshire) பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர், இலங்கை பொலிஸில் கடமையாற்றும் போது 2015 டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பான முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந் நாட்டின் 30 வருட காலமாக நடைபெற்ற கொடூர யுத்த காலத்தின் போது யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாகவும், நீர்கொழும்பு தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும், வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும், தொம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும் சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.
 

Leave a comment

Comment