TamilsGuide

தமிழர் பகுதியில் காய்த்துக் குலுங்கும் பேரிச்சம் பழங்கள்

கிழக்கின் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில், காய்த்துக் குலுங்கும் பேரிச்சம் பழங்களின் அறுவடை விழா இன்று காலை நடைபெற்றது.

விவசாயிகளும், பொதுமக்களும் உற்சாகமாக கலந்து கொண்டு அறுவடை பணிகளில் ஈடுபட்டனர்.

வெப்பநிலை காரணமாக பேரீச்சம் பழங்கள் அதிகளவில் காயத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வறுவடை காலம், இப் பகுதியில் பெரும் வர்த்தக உற்சாகத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் தூண்டும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.

குறித்த பேரீச்சம் மரங்களைக் காண உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள், காத்தான்குடிக்கு அதிகளவில் வருகை தருவது குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment