TamilsGuide

யாழில் குறி சொல்லும் கோவிலில் நடந்த துயரம் - மூடநம்பிக்கையால் பலியான இளம் குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு நோயை தீர்ப்பதற்காக  சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமுற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது நோயை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்துள்ளார்.

அதன்பின்னர் அவசர அம்புலண்ஸ் வண்டி வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துவிட்டு அம்புலண்ஸ் வண்டி திரும்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment