பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படக்குழுவை வெற்றி மாறன் சமீபத்தில் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
மேலும் தற்போது லிஃப்ட் படத்தின் இயக்குநரான வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் அடுத்ததாக அவரது 15-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று ஹரிஷ் கல்யாண் அவரது 35-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.


