TamilsGuide

மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இச் சோதனையில், மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஒரு பயணி அணில் குரங்கை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அணில் குரங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த அணில் குரங்கு, அரியவகை விலங்கு ஆகும். அதை கொண்டு வந்த பயணிடம் விசாரணை நடந்து வருகிறது.

கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.   
 

Leave a comment

Comment