TamilsGuide

அண்ணன் இருப்பது எப்போதும் ஸ்பெஷல் தான் - ஓஹோ எந்தன் பேபி பட விழாவில் கார்த்தி உருக்கம்

கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார்.தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.

திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா நேற்று நடைப்பெற்றது. அதில் திரைப்பிரபலங்களான கார்த்தி, வெற்றி மாறன், அஷ்வத் மாரிமுத்து, ஏ.ஜி.எஸ் அர்ச்சனா மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

அதில் கார்த்தி " ஒரு அண்ணன் இருப்பது எப்போதும் ஸ்பெஷல் தான், அப்பா கையில் தூக்கி வளர்த்தார் என்றால் அண்ணன் தோளில் தூக்கி வளர்ப்பார். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவரைப்பார்த்து நிறைய கற்று கொண்டேன். நான் திரைத்துறையில் அறிமுகம் ஆகும் போது என்னை மிகவும் அன்போடு வரவேற்று திரைத்துறை மக்கள் வாழ்த்தினர். அந்த அன்பு திரைத்துறையில் நுழையும் அனைவருக்கும் நாம் பகிர வேண்டும் அந்த ஒரு காரணத்திற்காக தான் நான் இங்கு வந்துள்ளேன்" என கூறினார்.

Leave a comment

Comment