நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநரான சூரியபிரதாப் இயக்குகிறார். இவர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரியபிரதாப் நாளைய இயக்குநர் சீசன் 1-ல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் கவுதம் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை வெர்சஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. பாடத்தின் பிற தகவல் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் ஒளிப்பதிவு - அர்ஜுன் ராஜா, படத்தொகுப்பு - ஜான் ஆப்ரஹம், இசை- விதுஷனன் மேற்கொள்கின்றனர்.


