TamilsGuide

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த SQUID GAME தொடரின் கடைசி பாகம் வெளியானது

கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு தான் இந்த ஸ்குவிட் கேம்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.

இதனையடுத்து உருவான ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் நெட்பிளிக்சில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் ஸ்குவிட் கேம் தொடரின் 3 ஆவது மற்றும் ஃபைனல் சீசன் வரும் தற்போது நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது. 6 எபிசோட்களைக் கொண்ட இந்த சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 
 

Leave a comment

Comment