TamilsGuide

சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்த 30 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை பொலிஸ் பிரிவின் பெலென்னாவத்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (27) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இறந்த பெண் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிலியந்தலை பொலிஸார் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment