TamilsGuide

வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தண்டனை இடமாற்றம்

யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவினால் இந்த இடமாற்றமானது இன்றுமுதல்(28) அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான செய்திகள் அண்மைக் காலமாக வெளிவந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment