TamilsGuide

83வது பிறந்த நாளில் $1 மில்லியன் ஜேக்க்பாட் வென்ற மூதாட்டி

ஸ்கார்பரோவில் வசிக்கும் மூத்த குடியிருப்பாளர் ஒருவர், தமது 83வது பிறந்த நாளில் லாட்டரியில் 1 மில்லியன் டொலர் பரிசு வென்று மகிழ்ச்சியில் உள்ளார்.

வர்ஜீனியா ஸபாடா என்ற இந்த மூதாட்டி, கடந்த 40 ஆண்டுகளாக லொடூ மெக்ஸ் Lotto Max மற்றும் Lotto 6/49 என்ற இரண்டு லொத்தர் சீட்டிலுப்புக்களிலும் பங்கேற்று வருகின்றார்.

கடந்த ஏப்ரல் 25ம் திகதி நடைபெற்ற Lotto Max சீட்டிலுப்பில் இந்த பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.

சீட்டிலுப்பு நடைபெற்று சில நாட்களுக்குப் பிறகு, தன்னுடைய டிக்கெட்டை சரிபார்த்த போது திரையில் காட்டப்பட்ட தொகையை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

“என் இதயத்துடிப்பு வேகமாகியது. நான் கடைக்காரரிடம் ‘இது உண்மையா? இது முடியாத விஷயம்’ என்று கேட்டேன்,” என வெற்றியீட்டிய தருணத்தை நினைவுகூர்ந்தார்.

இந்த வெற்றியை தனது நண்பர்களிடம் கூறியவுடன் அவர்கள் மகிழ்ச்சியில் சுற்றி ஆடியதாகவும் ஸபாடா தெரிவித்தார்.

“இது என் வாழ்நாளிலேயே சிறந்த பிறந்த நாளாக அமைந்துள்ளது. 83வது வயது எனக்கான ஆண்டாகியுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிறைவேற்றம் தனது வாழ்நாள் ஆசைகளில் ஒன்று எனக் கூறிய ஸபாடா, பெறும் தொகையை தனது குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளவும், வீட்டு கடனை செலுத்தவும், மேலும் பொருட்களை கொள்வனவு செய்யவும் திட்டமிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment