பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்காகக் கொண்டு வரிக் கொள்கையை அமுல்படுத்த கனடா முயற்சிப்பதால், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை "உடனடியாக நிறுத்தி வைப்பதாக” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
எல்லை வழியாக கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான புதிய கட்டணங்கள் எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


