TamilsGuide

சிறுவர்களைப் பாதுகாக்க விசேட செயற்றிட்டம்

சிறுவர்களை வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை முழுமையாகத் தடைசெய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ளது.

வீதியோரங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தல், பண்டங்கள் விற்பனை செய்வித்தல், வீட்டுப் பணிகள் உள்ளிட்ட அபாகரமான தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கு எதிரான சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

சிறுவர் உரிமைகள் சமவாயத்திற்கமைய 18 வயதுக்குக் குறைவான அனைவரும் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஒருசில சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் ஏதேனுமொரு தொழில் செய்வதற்கு பயன்படுத்தப்படுவது தமது தாய் தந்தையுடன், மனித வியாபாரத்திற்கு இரையாகி ‘வீதியோர சிறுவராக’ பெற்றோர் அல்லாதவர்களுடன் பொது இடங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பல்வேறு பொருட்கள் விற்பனையில் ஈடுபடுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை ஜூலை முதலாம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான இயலுமை கிட்டும் வகையில் தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளை அந்தந்த அதிகாரிகள் மூலமாக கடுமையாக அமுல்படுத்துவதற்கும், அதுதொடர்பான விரிவான பரப்புரை வேலைத்திட்டத்தின் மூலம் பொதுமக்களைத் தெளிவுபடுத்துவதற்கும் தமது அமைச்சு திட்டமிட்டுள்ள வேலைத்திட்டம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சால் சமர்பிக்கப்பட்டுள்ளமையால் குறித்த அமைச்சுக்கு உடன்பாட்டை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
 

Leave a comment

Comment