TamilsGuide

கடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேச சபை உறுப்பினர்கள்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

இதன் விளைவாக, சபை அமர்வை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் மீண்டும் அழைத்து வரப்பட்டால் மட்டுமே சபை நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment