TamilsGuide

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.

ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாக கூறி இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாகக் கூறி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்கு அழைக்கப்பட்டபோது பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment