TamilsGuide

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இன்று (27) கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட மீன்வள கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று (27) கைது செய்யப்பட்ட இவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சாட்சியங்களைப் பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 

Leave a comment

Comment