சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
'3 BHK' திரைப்படத்தின் டிரெய்லரரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் உருக்கமாக எமோஷனலாக இருக்கிறது. ஒரு நடுத்தர குடும்பம் 2 தலைமுறைகளாக ஒரு சொந்த வீடு வாங்க முயற்சி செய்வது போல் காட்சிகள் அமைந்துள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார் கண்கலங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
நான் சினிமாவிற்கு வந்த காலத்தில் இருந்து ஒரு நடிகனா இது எனக்கு 40வது படம். என் தாய், தந்தையிடம் அந்த விஷயத்தை பற்றி நான் சொன்னப்போ.. 40 படங்கள்ல நடிச்சிட்டல சித்து என்று என் அப்பா கூறினார். நான் அதற்கு பதிலும் சொல்லவில்லை. ஆனால் அந்த கேள்வியில் ஒரு பெருமை இருந்தது. ஆச்சரியம் இருந்தது. என் அப்பா கண்ணில் ஒரு ரிலீப் தெரிந்தது.
இங்கு மேடையில் பேசிய அனைவரும் அழ வைத்துவிட்டீர்கள். இது ஒரு இமோஷனலான தருணமாக இருக்கிறது.
இந்த 40 படங்கள அமைத்து கொடுத்தது என் தாய் தந்தை. தாய் எழுத்தாளர். தந்தை தயாரிப்பாளர். அவங்க ரெண்டு பேரும் நம்பி என் மீது முதலீடு செய்திருக்கிறார்கள். தாய் எழுத்தாளர் ஸ்ரீகணேஷ். தந்தை தயாரிப்பாளர் அருண் விஷ்வா. என்னை நம்பி படம் கொடுத்ததற்கு நன்றி.
எனக்கு 40 படங்கள் கடந்தது மனநிறைவாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.


