இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.
அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.
விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர். ஆரத்தழுவி சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.
விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு உள்ளிட்ட 4 பேரும் வரவேற்பு பானத்தை அருந்தினர்.
634வது விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லாவுக்கு ஆக்ஸியம்-4 மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன் "விண்வெளி வீரர் பின்" வழங்கினார்.
இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷூ சுக்லா கூறுகையில்," இதற்காக ஆவலுடன் காத்திருந்தேன். குழுவினர் என்னை வரவேற்று, எங்களுக்காக தங்கள் கதவுகளைத் திறந்தனர்.
நான் இன்னும் நன்றாக உணர்கிறேன், எனது எதிர்பார்ப்புகளை காட்சி மற்றும் தற்போதைய குழுவினர் விஞ்சியுள்ளனர்.
இந்த சாதகமான இடத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த சிலரில் ஒருவராக இருப்பது என் பாக்கியம்" என்றார்.


