இஸ்ரேல்-ஈரான் இடையே நடந்த போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டின் பேரில் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபின், முதல் முறையாக ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி பேசியதாவது:
அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம். ஈரானை தொட நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும்.
கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளோம். எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு, பாடம் புகட்டியுள்ளோம். தற்போதைய போரில் அமெரிக்காவுக்கு எந்த பலனும் இல்லை.
இஸ்லாமிய குடியரசு வெற்றி பெற்றது. மீண்டும் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை செய்தால் எதிரி நிச்சயம் அதிக விலை கொடுக்க நேரிடும். தேவைப்பட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் நிகழலாம்.
கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என தெரிவித்தார்.


