TamilsGuide

சிறந்த திரைப்பட விருது.. நியூயார்க்கில் அங்கீகாரம் பெற்ற அங்கம்மாள் திரைப்படம்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ’கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட அங்கம்மாள் திரைப்படத்திற்கு நியூயார்க்கில் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி அங்கம்மாள் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் கீதா கைலாசம், வட சென்னை, மெய்யழகன் படத்தின் சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

அங்கம்மாள் திரைப்படம்

இப்படம் மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த திரைப்பட விருதும் வழங்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டுக்கான நியூயார்க் 'இந்திய திரைப்பட விழா' சமீபத்தில் நடைபெற்ற நிலையில், விழாவின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விழாவின் பங்கேற்ற 'சிறந்த திரைப்படம்' விருதை வென்ற விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'அங்கம்மாள்' திரைப்படம் வென்றுள்ளது.

இது ஒரு கிராமத்தில் ஜாக்கெட் அணியாத தாயின் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பெருமாள் முருகனின் சிறுகதை திரைப்படமாக முதல்முறையாக உருவாக்கப்பட்ட நிலையில், படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

யார் இந்த கீதா கைலாசம்

சமீப காலமாக தொடர்ச்சியாக பல சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்து வருகிறார் கீதா கைலாசம். தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள ஸ்டார் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மகன் பால கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம். எழுத்தாளரான இவர் தற்போது பல்வேறு குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியின் மனைவியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கலையசனின் அம்மாவாக கலக்கல் பர்ஃபாமன்ஸ் வழங்கி இருந்தார் என்றே சொல்லலாம்.

தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், லவ்வர் படத்தில் மணிகண்டனின் அம்மாவாக, ஸ்டார் படத்தில் கவினின் அம்மாவாக என இன்றைய தலைமுறையினரின் மனதில் செண்டிமெண்ட் அம்மாவாக இடம்பிடித்துள்ளார் கீதா கைலாசம்.

இந்தப் படங்கள் தவிர்த்து வெந்து தணிந்தது காடு, வீட்ல விசேஷம், டியர், இன்ஸ்பெக்டர் ரிஷி, நவரசா, கட்டில், அனல்மேலே பனித்துளி உள்ளிட்ட படங்கள் மற்றும் இணைய தொடர்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
 

Leave a comment

Comment