பிரேமலு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகரான நஸ்லென். இவர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் ஆலப்புழா ஜிம்கானா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. படத்தின் இயக்குநரான காலித் ரஹ்மான் இதற்கு முன் உண்டா, லவ் , தல்லுமாலா போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை காலித் மற்றும் ஸ்ரீனி சசீந்தரன் இணைந்து எழுதினர். நஸ்லேன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இவருடன் லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனக்ஹா ரவி , கோட்டயம் நஸீர் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கஞ்சா உபயோகித்ததால் படத்தின் இயக்குநரான காலித் ரகுமானை காவல் துறையினர் கடந்த மாதம் கைது செய்து அதன் பிறகு விடுவித்தனர். இந்நிலையில் காலித் ரகுமான் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தை யுனிவர்சல் சினிமா மற்றும் பிளான் பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


