TamilsGuide

இலங்கை சொற்களுக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்

ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (OED) ஜூன் 2025 புதுப்பிப்பில் பல தனித்துவமான இலங்கைச் சொற்களைச் சேர்த்துள்ளது.

குறிப்பாக கொத்து ரொட்டி, கிரிபாத் உள்ளிட்ட பல பிரபலமான இலங்கை வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இது தவிர, ‘பைலா’ மற்றும் ‘பப்பரே’ என்ற கலாச்சாரச் சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இது உலகளாவிய ஆங்கில பயன்பாட்டில் இலங்கை உணவு வகைகள் மற்றும் மரபுகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைக் குறிக்கிறது.

புதிய உள்ளீடுகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமகால பயன்பாட்டை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி ஆசிரியர் குழு ஏற்கனவே உள்ள பல இலங்கை ஆங்கில சொற்களையும் திருத்தியுள்ளது.

அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய இலங்கை சொற்கள்

அஸ்வெத்துமைஸ், அவுருது, பைலா, கிரிபத், கொத்து ரொட்டி, மல்லுங், ஒசரி, பப்பரே, வளவ்வ, வட்டலப்பம்.

திருத்தப்பட்ட சொற்கள் :

சிலோன் காபி, சிலோன் டீ, சிலோனீஸ், கொழும்பு, டகோபா, கங்கானி, சிங்களி, தமிழ், யுஎன்பி, வேத்தா, விஹாரா மற்றும் பிற.

இந்த புதுப்பிப்பு உலகளாவிய மொழியியல் நிலப்பரப்புகளில் இலங்கை கலாச்சாரம் மற்றும் மொழியின் வளர்ந்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.
 

Leave a comment

Comment