TamilsGuide

போலி கடவுசீட்டுகளை பயன்படுத்தி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ். இளைஞர்கள் கைது

போலி கடவுசீட்டுகளை பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் நேற்று (25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment