TamilsGuide

ஈரானிய தூதுவருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித் ஹேரத் தனது எக்ஸ் கணக்கில் பதவிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

எந்தவொரு தீவிரப் போராட்டமும் இலங்கை உட்பட பிராந்தியத்திற்கும் அதற்கு அப்பாலும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதருக்கு விளக்கியதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a comment

Comment