எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இரத்தினபுரியின் நிவித்திகலை பிரதேச சபையிலும் நுவரெலியாவின் அம்பகமுவ பிரதேச சபையிலும் அதிகாரத்தை ஸ்தாபித்துள்ளது.
இன்று நடைபெற்ற நிவித்திகலை பிரதேச சபையின் முதல் அமர்வின் போது, SJB இன் அஜித் நாவலகே அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையில், நேற்று நடைபெற்ற சபையின் தொடக்க அமர்வின் போது, SJB வேட்பாளர் கபில நகந்தல, அம்பகமுவ பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு உள்ளூராட்சி மன்றங்களிலும் நடைபெற்ற தேர்தல்களின் போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பின்னர் SJB வேட்பாளர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 உள்ளூராட்சித் தேர்தலில் SJB மேற்கண்ட இரண்டு உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


