வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பெரிய அளவிலான நிதி மோசடி குற்றச்சாட்டில் தெஹிவளையைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் 150 நபர்களிடமிருந்து கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக குறித்த நபர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (24) மாலை கிருலப்பனை பொலிஸ் பிரிவில் இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கொம்பனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


