TamilsGuide

ஹொரணை – கொழும்பு 120 வழித்தட பேருந்துகள் வேலைநிறுத்தம்

ஹொரணை – கொழும்பு வழித்தட எண் 120 இல் இயங்கும் தனியார் பேருந்துகளை இன்று (25) சேவையிலிருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

120 வழித்தடத்தில் ஒரு பேருந்து முறையற்ற முறையில் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பயணிகளின் வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கூடுதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment