ஜூன் மாதத்தில் இதுவரை மொத்தம் 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.
SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
இந்தியாவில் இருந்து மொத்தம் 27,504 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்,
இது 29.4% ஆகும்.
மேலும், ஜூன் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 7,716 பேர், சீனாவிலிருந்து 6,097 பேர், பங்களாதேஷிலிருந்து 5,035 பேர் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 4,594 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில், ஜூன் மாதத்திற்கான அண்மைய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,123,289 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 231,564 பேர் இந்தியாவிலிருந்தும், 111,940 பேர் ரஷ்யாவிலிருந்தும், 103,990 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என்று SLTDA குறிப்பிட்டது.


