TamilsGuide

தென்னாப்பிரிக்க பிரஜைக்கு ஆயுள் தண்டனை

2021 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று குற்றச்சாட்டுகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (25) தீர்ப்பு வழங்கப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆபத்தான போதைப்பொருளை வைத்திருந்தமை, கடத்துதல் மற்றும் இறக்குமதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நீர்கொழும்பு மே நீதிமன்ற நீதிபதி கவிந்திர நாணயக்கார, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மூன்று தண்டனைகளும் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
 

Leave a comment

Comment