TamilsGuide

ஒண்டாரியோவில் 34 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி

ஒன்றாரியோ மாகாணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு 34 மில்லியன் டொலர் பணப் பரிசு கிடைக்கப் பெற்றள்ளது.

அண்மையில் இரண்டாவது முறையாக லொட்டோ கோல்ட் போல் ஜக்பொட் Lotto 6/49 Gold Ball Jackpot பரிசு ஒண்டாரியோ மாகாணத்தில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த முறை, 34 மில்லியன் டொலர் மதிப்புள்ள டிக்கெட் நார்த் பேய் (North Bay) நகரில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தியுள்ளது.

ஜூன் 21 ஆம் திகதியின் லாட்டோ லொத்தர் சீட்டிலுப்பில் பணப் பரிசு வென்றவர்கள் யார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவிலல்லை.

இந்த அபூர்வ வெற்றியை வென்றவர்களுடன் விரைவில் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என லொத்தர் சீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்னும் விரிவான தகவல்களை OLG-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். பொறுப்புடன் விளையாடுங்கள் என OLG வலியுறுத்தியுள்ளது. 
 

Leave a comment

Comment