TamilsGuide

உதவிப் பொருட்களுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு.. 25 பேர் பலி - 146 பேர் படுகாயம்

காசாவில் உதவிப் பொருட்களை பெற உதவி மையத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

காசாவில் வாடி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, சலா அல்-தின் சாலையில் உதவிப்பொருட்களுடன் வரும் லாரிகளுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். 146 பேர் படுகாயமடைந்தனர்.

லாரிகளை நெருங்க மக்கள் ஓடியபோது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த 146 பேரில் 62 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும், நுஷ்ரைத் அகதி முகாமில் உள்ள அவ்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ராணுவத்தினர், டிரோன்கள், மற்றும் பீரங்கிகள் இணைந்து கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.

இந்த உயிரிழப்புகள் மூலம் காசாவில் கடந்த அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய ராணுவ தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 56,000 த்தை கடந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment