TamilsGuide

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மிளகாய் தூள் வீசித் தாக்குதல்

யாழ் -மானிப்பாய் பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மிளகாய் தூள் வீசி கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது” தனது பிள்ளைகளைப் பாடசாலையில் இறக்கி விட்டு, மோட்டா சைக்கிளில்,  வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் மீது, கட்டுடை பகுதியில்,  மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் மிளகாய் தூளை வீசியுள்ளனர்.

இதனால் நிலை தடுமாறி விபத்துக்குள்ளான நபர் மீது,  மர்ம நபர்கள்  கூரிய ஆயுதத்தால் சரமாரியாகத்  தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் செற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த நபரை  வீதியில் சென்றவர்கள் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment

Comment