மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு கத்தாரில் உள்ள தனது குடிமக்கள் மிகவும் அதிகக் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடனடியாக வீடுகளில் தங்கிக் கொள்ளுமாறு அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட கட்டார் வாழ் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா அறிவித்திருந்தது.
பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை எச்சரிக்கையில்லாமல் திடீரென மிக மோசமான நிலைக்கு மாறக்கூடும்” என கனடிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சூழ்நிலை மோசமாகும் அபாயம் இருந்தாலும், தற்போது வரை கனடா அரசால் வீடுகளில் தங்கியிருக்குமாறு “Shelter-in-place” உத்தரவு வழங்கப்படவில்லை.
இருப்பினும், கத்தாரில் உள்ள கனடியர்கள் தங்களது பாதுகாப்பிற்காக இடையறாது உத்தியோகபூர்வ அறிவிப்புகளை கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


