TamilsGuide

ஈரானுக்கு எதிரான போரை டிரம்ப் நிறுத்த வேண்டும் என்று நியூயார்க்கில் பொதுமக்கள் போராட்டம்

இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவும் தற்போது ஈரானுக்கு எதிரான நேரடி ராணுவ நடவடிக்கையை முதன் முறையாக தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்று பெயரிடப் பட்ட 7 பி-2 நவீன ரக குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் போர் விமானங்கள ஈரான் மீது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த விமானங்கள் ஈரானில் உள்ள போர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான், ஆகிய 3 அணுசக்தி தளங்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசியது. இந்த நவீன ரக விமானங்கள் 30 ஆயிரம் பவுண்டு ( 13,500 கிலோ ) எடை கொண்ட பங்கர் பஸ்டர் எனப்படும் பதுங்கு குழிகள் அழிப்பு குண்டுகளை வீசியது.

ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தில் மேலே உள்ள மலையில் மோதிய இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்க படைகள் தாக்கியதில் அணு சக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமையுடன் கூறினார்.

இடைவிடாமல் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானங்கள் பத்திரமாக மீண்டும் மிசோரியில் உள்ள வைட்மேன் விமான படை தளத்திற்கு திரும்பி உள்ளது.

தங்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதால் ஈரான் பதிலடி கொடுக்கும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத் தப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் லெபனானில் உள்ள அமெரிக்க துணை தூதரக ஊழியர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக் கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரான் மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
 

Leave a comment

Comment