TamilsGuide

இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் - இலவச அனுமதி

கொழும்பில் அமைந்துள்ள எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான நுழைவு பொதுமக்களுக்கு இலவசமாகத் திறந்திருக்கும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

SLC அறிக்கையின்படி, பொதுமக்கள் போட்டியைக் காண 03 மற்றும் 04 ஆம் இலக்க நுழைவாயில் வழியாக மைதானத்திற்குள் நுழையலாம்.

தொடரின் 2 ஆவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (25) காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்தத் தொடர் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–2027 சுழற்சியின் ஒரு பகுதியாகும்.
 

Leave a comment

Comment