நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.
படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா இணைந்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் இந்த வாரம் மைசூரில் நடைப்பெற்று வருகிறது. இன்று படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை பார்க்க மக்கள் கடலென திரண்டுள்ளனர். ரஜினிகாந்த் காரில் வரும்போது அனைவருக்கும் கை காட்டி அன்பை வெளிப்படுத்தினார். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


