ரோஜா கூட்டம் என்ற படத்டின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மனதி, மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக வாக்கு மூலம் கொடுக்க அதன் அடிப்படையில் சீகாந்திடம் விசாரணை நடத்தி தற்பொழுது அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


