சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது.புக் மை ஷோ செயலியில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது.படத்தின் வெற்றி விழா நேற்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது.
திரைப்படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. திரைப்படம் இதுவரை 50 கோடி ருபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


