மட்டக்களப்பு, களுவங்கேணி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று வீதியை விட்டு விலகி பனைமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும், இதில் காரை செலுத்திச் சென்ற சாரதியும் அதில் பயணித்த 15 வயதான சிறுமியும் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை குறித்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமியின் தாயாரான பாலச்சந்திரன் மோகனகாந்தி மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலம் மட்டுபொதனா வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


