TamilsGuide

தளபதி is an Emotion - விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்குபின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது.

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விஜய்க்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் "உணர்ச்சிவசப்படுவது ஒரு திறமை, மற்றவர்களை உணர்ச்சிவசப்படுத்துவது ஒரு கலை, உணர்ச்சியாக மாறுவது ஒரு மரபு, நீங்கள் அப்படிப்பட்ட ஒரு ஆளுமை உள்ள ஒரு நபர் சார் நீங்க. ஹாப்பி பர்த்டே டூ நம்ம ஜன நாயகன் தளபதி சார்" 
 

Leave a comment

Comment