TamilsGuide

கவினின் அடுத்தப்படம் குறித்து வெளியான அப்டேட்

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் கிஸ். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ஆண்டிரியாவுடன் மாஸ்க் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கவின் அடுத்ததாக பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இதனை கவினின் பிறந்தநாளான இன்று அந்த நிறுவனம் வாழ்த்து தெரிவித்து அறிவித்துள்ளது. இப்படத்தை பத்து தல படத்தை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

Leave a comment

Comment