பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல் பகுதியில் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்தக்குள்ளானதில் 03பேர் உயிரிழந்துள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று(21) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளானவர்கள் அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தில் பயணித்தவர்கள் நேற்று அதிகாலை பதுளை முத்தியங்கன விகாரையில் வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன், பதுளை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் உடனடியாக செயற்பட்டு காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இதேவேளை, விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணையில், விபத்து நேர்ந்தபோது பேருந்தை சாரதியின் உதவியாளரே செலுத்தியிருந்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


