TamilsGuide

மின் உயர்த்தியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மின் உயர்த்தியில் (lift) இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) இரவு இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

இவர் குறித்த விடுதியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ள நிலையில், பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் மின் உயர்த்தியில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த போது இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம், யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment