TamilsGuide

அஸ்மிதா கொடுத்த புகாரில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது

தமிழகத்தில் உள்ள மிகவும் பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்டுகளில் ஒருவர் அஸ்மிதா. இவர், 10-ஆம் வகுப்பு முடித்த பின்னர், ஹீரோயினாக நடிக்க துவங்கினார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு மேக்கப் துறையில் இறங்கி தன் திறமை மற்றும் உழைப்பின் மூலம் அவருக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.

இன்று தமிழகத்தில் உள்ள மிக முக்கிய மேக்கப் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் அஸ்மிதா, அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு, யூடியூப் பிரபலமான விஷ்ணுகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி, 2 குழந்தைகள் பிறந்த பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதை தொடர்ந்து மீண்டும் கர்ப்பமான அஸ்மிதாவுக்கு போன மாதம் 3-ஆவது குழந்தை பிறந்தது.

அஸ்மிதாவின் கணவர் விஷ்ணு சமீபத்தில் தன்னுடைய நண்பரின் சகோதரியிடம், அண்ணன் என பேசிவிட்டு, பின்னர் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே அஸ்மிதா - விஷ்ணு இடையே நடக்கும் பிரச்சனை பற்றி எரிந்துகொண்டிருந்தது. விஷ்ணு அஸ்மிதா மீது தன் குழந்தையை சரிவர வளர்ப்பதில்லை. எப்பொழுதும் போனில் தான் உள்ளார் என கூறுவதும். விஷ்ணு தன்னை அடித்து உடல்ரீதியாக துன்புறுத்துகிறார் என அஸ்மிதா காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அஸ்மிதா கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணு மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்மிதா கொடுத்த புகார் மனுவில், தன்னுடைய கணவர் விஷ்ணுகுமார் கடந்த மார்ச் மாதம் காரில் சென்ற போது, ஓடும் காரில் வைத்து தன்னை தாக்கியதாகவும், தனது வாயை கிழித்ததாகவும், அதில் பற்கள் உடைந்ததாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஷ்ணு பல பெண்களுடன் தவறான உறவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment