TamilsGuide

ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களுக்கு இந்தியா உதவி

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான இராணுவ சூழ்நிலை காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இன்று (21) இது குறித்த அறிக்கையை வெளியிட்டது.

அத்தோடு, ஈரானில் உள்ள நேபாள நாட்டினருக்கும் இந்தியா இதே போன்ற உதவியை வழங்குகிறது.

‘ஆபரேஷன் இண்டஸ்’ திட்டத்தின் கீழ் இரு அண்டை நாடுகளிலிருந்தும் குடிமக்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment