TamilsGuide

ஈரான் மீதான தாக்குதல்களை கண்டித்து வடகொரியா அறிக்கை

ஈரான் மீதான தாக்குதல்களை கண்டித்து வடகொரியா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் வெளியுறவுஅமைச்சு ஈரான் மீதான தாக்குதல்கள் இஸ்ரேலின் அரசபயங்கரவாதத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் என குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் தற்போது மத்திய கிழக்கில் புதிய யுத்தம் மூளும் ஆபத்தை உருவாக்கியுள்ளது எனவும் வடகொரியாதெரிவித்துள்ளது.

இஸ்ரேலை அமைதியை பாதிக்கும் புற்றுநோய் என வர்ணித்துள்ள வடகொரியா சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சர்வதேச குற்றவாளி இஸ்ரேல் என தெரிவித்துள்ளது.

ஈரானின் சட்டபூர்வ இறையாண்மை உரிமை பற்றி பேசுவதன் மூலம் அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் யுத்தத்தின் தீப்பிழம்புகளை மூட்டிவிடுகின்றன என தெரிவித்துள்ள வடகொரியா ஈரான் பாதிக்கப்பட்டநாடு என தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment