சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 85 சீனப் பிரஜைகள் இன்று (ஜூன் 20) காலை இலங்கையிலிருந்து சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நபர்கள் நாட்டில் வசிக்கும் போது உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் காவலில் வைக்கப்பட்டனர்.
உள்ளூர் நீதிமன்றங்களால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் வெலிசரவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதுடன், நாடு கடத்தலுக்காகவும் காத்திருந்தனர்.
இந்த நிலையில், ஐந்து பேருந்துகளில் கடும் பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழுவினர் இன்று காலை நாடு கடத்தப்பட்டனர்.


