TamilsGuide

மரக்கறிகளை விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

மரக்கறிகளை விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்தவரை  நிந்தவூர் பொலிஸார் நேற்றுக்  கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர் தப்பியோட முயற்சி செய்ததாகவும், இதனையடுத்து பொலிஸார்  கடும் சிரமத்துடன் சந்தேக நபரை  கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மரக்கறி விற்பனை செய்யும் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment